16 2 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டில் அதிகரிக்கும் கட்டாக்காலி நாய்கள்: நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு

Share

நாட்டில் அதிகரிக்கும் கட்டாக்காலி நாய்கள்: நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 6.2 மில்லியன் கட்டாக்காலி நாய்கள் சுற்றித் திரிவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய (07.03.2024) அமர்வின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

“சீகிரியா போன்ற சுற்றுலாப் பகுதிகளில் கட்டாக்காலி நாய்கள் சுற்றித் திரிவது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

கிடைக்கப்பெற்றுள்ள புள்ளிவிபரங்களின்படி நாட்டில் 6.2 மில்லியன் கட்டாக்காலி நாய்கள் காணப்படுகின்றன.

சுற்றுலாப் பகுதிகளிலும் இது பாரதூரமான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளமையால், இதற்கு தீர்வு காண்பது முக்கியம்“ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் விலங்குகளுக்கு ஏற்படும் தீங்குகளை குறைப்பதற்காக புதிய சட்டங்களை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், விலங்குகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எல்லாவற்றிற்கும் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...