இலங்கையில் ஸ்டார்லிங்க் இணையம் விரைவில் ஆரம்பம்!

25 683ebbf1535b9

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான நடவடிக்கைகள் முழுமை பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை விரைவில் அறிமுகமாகவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கான அனைத்து முன் ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ள நிலையில், தொழில்நுட்ப கட்டமைப்புகளை ஸ்டார்லிங்க் வழங்கியவுடன் சேவைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன கூறுகையில்,

அனைத்து முன்நிபந்தனைகளையும் அரசாங்கம் நிறைவு செய்துள்ளது.

சர்வதேச தொடர்பு மற்றும் தகவல் கொள்கைக்கான ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தூதுவர் ஸ்டீவ் லாங்குடன் சிங்கப்பூரில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRC) ஸ்டார்லிங்கிற்கு அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version