நாட்டின் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை

tamilni 300

நாட்டின் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கநாட்டின் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை

நாட்டில் காற்றின் தரம் குறித்து இலங்கை கட்டிட ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

குறிப்பாக பதுளை மாவட்டத்தில் வளிமண்டலத்தில் தூசி துணுக்குகளின் செறிவு அதிகளவில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறுவர்கள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உடையவர்களுக்கு இந்த நிலைமையினால் பாதிப்புக்கள் ஏற்படக் கூடும் என பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் ஈ.எல்.எம். உதயகுமார தெரிவித்துள்ளார்.

முகக் கவசங்களை அணிவது உசிதானமாது எனவும் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குவோர் திறந்த வெளியில் இருப்பதனை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காற்று மாசடைந்திருப்பதனால் இவ்வாறு காற்றின் தரம் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version