நாட்டின் மிக முக்கிய நகரங்களான கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.
ஊடகப் பேச்சாளர் காற்று மாசு தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பத்தரமுல்லை மற்றும் கொழும்பு கோட்டை பகுதிகளில் காற்று மாசு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
Comments are closed.