coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

Share

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 600 இற்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்புத் திட்டம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 6% நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி எயிட்ஸ் பாதிப்பினால் சுமார் 30 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. தொற்று ஏற்பட்டவர்களில் ஆண்களே அதிகம். ஆண் – பெண் விகிதாசாரம் 6:1 எனும் விகிதத்தில் உள்ளது.

மேலும் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் 68 ஆண்களும் 3 பெண்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு ஏனையோர் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் எயிட்ஸ் பாதிப்பினை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் பாதிப்பைக் குறைக்க முடியும் என கூறப்படுகிறது.

 

Share
தொடர்புடையது
images 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: பெப்ரவரி 28-க்குள் கருத்துக்களை வழங்குமாறு நீதியமைச்சர் கோரிக்கை!

தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச்...

articles2FgXcy4cN9KrF77yKDhQ7d
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உளநல மேம்பாட்டுத் திட்டம்: திங்கட்கிழமை ஆரம்பம்!

அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் மன ஆரோக்கியம் மற்றும் நலன்புரி ஓம்புகையை மேம்படுத்தும் நோக்கில், வளவாளர்களைப்...

court 1 467564 496008 850x460
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கணிதப் புள்ளிகள் குறைந்ததற்காக மாணவிக்கு 160 பிரம்படி: தனியார் வகுப்பு ஆசிரியருக்கு பிணை!

காலி நகரில் தனியார் வகுப்பு ஒன்றில் கல்வி பயிலும் 11-ஆம் தர மாணவிக்கு மனிதாபிமானமற்ற முறையில்...

23 657a8557d51bd md
செய்திகள்இலங்கை

காய்கறி விலையில் கடும் அதீத உயர்வு: பச்சை மிளகாய் 1,000 ரூபாயைத் தாண்டியது; மக்கள் கடும் அவதி!

இலங்கையின் சில பகுதிகளில் தாழ்நிலக் காய்கறிகளின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத உயர்வை எட்டியுள்ளதாகச்...