நாட்டிலுள்ள பாடசாலைகள் குறித்து அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி

27 14

நாட்டிலுள்ள பாடசாலைகள் குறித்து அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி

100 பாடசாலைகளில் AI தொடர்பான கல்வி முறைமை வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

‘செயற்கை நுண்ணறிவுடனான மாணவ சமூகம்’ என்பதை முன்னோடி கருத்திட்டமாக செயற்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த கருத்திட்டத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஆண்டுகளில் இவ்வேலைத்திட்டத்தை ஏனைய பாடசாலைகளில் விரிவாக்கம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப படிமுறையாக தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளில் 6ஆம் தரம் முதல் 9ஆம் தரம் வரைக்கும் கல்வி பயிலும் மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளது.

Exit mobile version