images 3 1
இலங்கைசெய்திகள்

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி பகிர்ந்த தகவல்

Share

உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்த நிகழ்வு அதியமாக பார்க்கப்படுகின்றது.

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 4 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர்.

தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விமான விபத்தில் விஷ்வாஸ் குமார் ரமேஷ் (40) என்ற பயணி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

விமானம் விபத்துக்குள்ளாகியதும் எல்லோரும் பதற்றத்தில் ஓடும் போதும் தான் விமானத்தில் பயணித்தவர் என கூறியப்படியே வந்துள்ளார்.

காலில் லேசாக அடிபட்டிருந்ததால், சற்று தாங்கியபடி சென்ற இவரின் காணொளிக்காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றது.

டையூ பகுதியை பூர்வீகமாக கொண்ட இவர், 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் லண்டனில் வசிப்பதோடு அந்நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார்.

விமானத்தின் 11ஏ இருக்கையில் அவர் பயணம் செய்துள்ளார். அதே விமானத்தில் பயணம் செய்த அவரது அண்ணன் அஜய் குமார் விபத்தில் உயிரிழந்துவிட்டார். அவரது உடலை அடையாளம் காண முடியவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், “உயிர் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை, விடுதியில் விமானம் மோதிய பக்கம் நான் அமரவில்லை, நான் விழுந்த இடம் விடுதியின் தரைப்பகுதி எனக்கு அருகில் இருந்த கதவு உடைந்ததால் நான் வெளியில் வந்தேன்

விமானம் விழுந்த பகுதியின் எதிர்ப்பக்கத்தில் சுவர் இருந்ததால் யாராலும் தப்ப முடியவில்லை. நான் அமர்ந்திருந்த பகுதியில் மட்டுமே தப்பிக்க இடம் இருந்தது நான் எப்படி பிழைத்தேன் என எனக்கே தெரியவில்லை” “எல்லாம் என் கண்முன் நிகழ்ந்தன.

மற்றவர்களின் உயிர் போவதை என் கண்முன்னே பார்த்தேன் நானும் இறந்துவிடுவேன் என்றே நினைத்தேன். விமானத்தை பறக்க வைக்க விமானிகள் முடிந்தவரை முயற்சித்தனர்” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...