முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிறீதரன் எம்.பியுடன் கலந்துரையாடிய அக்னெஸ் கலமார்ட்

24 66492f3ce6046

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிறீதரன் எம்.பியுடன் கலந்துரையாடிய அக்னெஸ் கலமார்ட்]

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று அஞ்சலி செலுத்த வந்திருந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் (S. Shritharan) கலந்துரையாடியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு அருகில் காலை 10 மணியளவில் வாகனத்தில் வந்திறங்கிய சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்தைச் சிறீதரன் எம்.பி. வரவேற்றார்.

அதன்பின்னர் சிறீதரன் எம்.பியுடன் சிறிது நேரம் கலந்துரையாடிய அக்னெஸ் கலமார்ட் , முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வரிசையாக நின்று அங்கு அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு மலர் தூவி, மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினார்.

Exit mobile version