tamilni 76 scaled
இலங்கைசெய்திகள்

மீண்டும் அதிகரிக்கப்படுகிறது மின் கட்டணம்

Share

மீண்டும் அதிகரிக்கப்படுகிறது மின் கட்டணம்

அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 வீதமாக அதிகரிக்கப்படவுள்ள VAT வரி எரிபொருள் விலை நிர்ணயத்தை நேரடியாகப் பாதிப்பதால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சார சபை மறுசீரமைப்பை எதிர்க்கும் தொழிற்சங்க தலைவர்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய வந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் மின்சார உற்பத்திக்கான டீசல் போதுமான அளவு ஒதுக்கப்படவில்லை என்று கூறிய அவர், இதுவரையிலும் நாட்டு மக்களுக்கு பலன்கள் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...