Untitled 1 59 scaled
இலங்கைசெய்திகள்

மீண்டும் வெடிக்கும் போராட்டம்!! விடுக்கப்பட்ட அழைப்பு!!

Share

சர்வதேச பிணைமுறி வழங்குநர்களின் கோரிக்கைக்கு அமையவே அரசாங்கம் தேசிய கடன்களை மறுசீரமைக்க தீர்மானித்துள்ளது.

தேசிய கடன்களை மறுசீரமைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதிக்கவில்லை.
அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு எதிராக நாட்டு மக்கள் அணி திரள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அஸ்வெசும நலன்புரி செயற்திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் மக்களின் கவனத்தை திசை திருப்பி இரகசியமான முறையில் தேசிய கடன் மறுசீரமைப்பை நாடாளுமன்றத்தின் ஊடாக இறுதிப்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

நாட்டுக்கு எதிரான ஒரு தீர்மானத்தை செயற்படுத்தும் போது மக்களின் கவனத்தை திசைத்திருப்ப பிறிதொரு விடயத்தை முன்னிலைப்படுத்துவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெற்ற போது அந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்தின் ஊடாக நாட்டுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டன.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய தேசிய கடன் மறுசீரமைக்கப்படுவதாக அரசாங்கம் குறிப்பிடுவது அடிப்படையற்றது.
சர்வதேச பிணைமுறி வழங்குநர்களின் கோரிக்கைகளுக்கு அமையவே தேசிய கடன் மறுசீரமைக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் வங்கி கட்டமைப்பு நிச்சயம் பாதிக்கப்படும்.
ஆகவே அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும் என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...