இலங்கைக்கான இந்தோனேசியா தூதுவரை சந்தித்த ஆப்கானிஸ்தான் துணை பேச்சாளர்

இலங்கையின் இந்தோனேசியாவுக்கான தூதுவர் வைஸ் எட்மிரல் ஜயநாத கொலம்பகே, அண்மையில் ஆப்கானிஸ்தானின் துணை பேச்சாளர் ஹபீஸ் ஸியா அஹமட்டை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

எனினும் இந்த சந்திப்புக்கான அனுமதியை கொலம்பகே, கொழும்பு நிர்வாகத்திடம் பெறவில்லை என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

வைஸ் அட்மிரல் கொலம்பகே, முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் போது வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பதவி வகித்தார்.

இதேவேளை ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் நிர்வாகத்தை இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்பதையும் ஆங்கில ஊடகம், வெளியுறவு அமைச்சிடம் உறுதி செய்துள்ளது.

Exit mobile version