அரசாங்கத்தின் தவறை சபையில் ஒப்புக்கொண்ட பிரதமர்

6 9

தென்னைச் செய்கையை அபிவிருத்தி செய்வதற்கான சரியான அரசாங்கக் கொள்கையின்மையே நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் பற்றாக்குறைக்கு காரணம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய(06.02.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும், நாட்டில் தேங்காய் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், தென்னை சாகுபடியை மேம்படுத்த இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளதாக ஹரிணி தெரிவித்துள்ளார்.

அத்துடன், பெருந்தோட்டங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் தேங்காய் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த நடவடிக்கைகளில் அதிக விளைச்சல் தரும் தேங்காய் வகைகளுக்கான சோதனை, வினைத்திறனான விவசாய நடவடிக்கைகளை இனங்காணல் மற்றும் நோய்த் தாக்கங்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக தீர்வு காணல் ஆகிய செயற்பாடுகள் உள்ளடங்குவதாகவும் அவர் விபரித்துள்ளார்.

Exit mobile version