வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அத்தியவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அப்பொருட்களுக்கான டொலர்களை விரைவில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன தேவையான நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கு மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளார்.
துறைமுகத்தில் சீனி, உருளைக்கிழங்கு, அரிசி, பெரிய வெங்காயம் மற்றும் பருப்பு போன்றன தேங்கிக் கிடக்கின்றன.
#SriLankaNews