ஒழுங்கான சேவை வழங்க தவறும் அமைச்சுக்கள் தொடர்பில் நடவடிக்கை

rtjy 302

ஒழுங்கான சேவை வழங்க தவறும் அமைச்சுக்கள் தொடர்பில் நடவடிக்கை

பொதுமக்களுக்கு அமைச்சுக்கள் ஒழுங்கான சேவை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் சில அமைச்சு செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், மக்கள் நலக் கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்தத் தவறிய சில அமைச்சுச் செயலாளர்கள் நீக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை படிப்படியாக மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் எடுத்து வரும் பொருளாதார மற்றும் சமூக நலன்புரி கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிக்காத அமைச்சின் செயலாளர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மக்களுக்கு உரிய சேவை கிடைக்கவில்லை என பொதுமக்களின் முறைப்பாடுகளை பெற்றுக்கொண்ட அமைச்சின் செயலாளர்கள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version