rtjy 93 scaled
இலங்கைசெய்திகள்

நீதிபதிகள் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்த கருத்தால் புதிய சர்ச்சை

Share

நீதிபதிகள் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்த கருத்தால் புதிய சர்ச்சை

அசாத் மௌலானா கூறிய சில கருத்துக்களை மையப்படுத்தி நீதியரசர் ஒருவரை மிக மோசமான கருத்துக்களை கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் விமர்சித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று முன் தினம்(05.10.2023) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

”குறித்த நீதியரசர் பிள்ளையானின் வழக்கில் நேரடியாக தலையிட்டு தீர்ப்பு வழங்கியதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விடயம். அந்த நீதியரசர் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக இருந்தவேளை பிள்ளையான் எந்த ஒரு சந்தர்பத்திலும் மனுதாக்கல் செய்யவில்லை.

மேலும் தான் நீதிமன்றத்திற்கு செல்லும் முன் நீதிமன்ற ஆசனத்தில் உள்ள நீதிபதியை பார்த்துதான் வழக்குகளை தயார் செய்வேன் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இலங்கையின் சுயாதீன நீதித்துறை தொடர்பில் சுமந்திரன் மிக மோசமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...