யாழில் கோர விபத்து: இரண்டு இளைஞர்கள் பலி

Murder Recovered Recovered 2

யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று(2) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்று மாலை புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் அதி வேகத்தில் பயணித்த இளைஞர்கள் இருவரும் வீதியின் குறுக்கே வந்த மாட்டைக் கடப்பதற்காகத் முயற்சித்த போது எதிரே இருந்த மின்சார கம்பத்துடன் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் கந்தரோடை சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 17, 18 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version