கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் வீதி விபத்துக்கள் காரணமாக எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தின் வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து தொடர்பான இந்த மாதத்திற்கான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் போதே குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி போக்குவரத்துகளில் அதிகரித்த வேகம், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், வீதிகளில் கால்நடைகளின் நடமாட்டம் என்பவற்றினால் வீதிபத்துக்கள் அதிகரித்து வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்துகளில் 28 பேர் உயிரிழந்துள்ளதுடன், 58 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர் எனவும் கலந்துரையாடல் மூலமாக தெரியவந்துள்ளது.
மேலும் எதிர்காலத்தில் விபத்துக்களை தடுப்பது தொடர்பிலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.