யாழில் இளைஞன் சடலமாக மீட்பு

tamilni 372

யாழில் இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த இளைஞன், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நெடுந்தீவு மேற்கை சேர்ந்த 25 வயதுடைய குணராசா தனுஷன் என்ற இளைஞரே நேற்று (30.10.2023) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இளைஞனின் உறவினர்கள் வெளியூரில் வசிக்கும் நிலையில் அவர்களின் வீட்டினை இளைஞனே பராமரித்து வருவதுடன் , வீட்டின் பாதுகாப்புக்காக அந்த வீட்டில் தங்கியும் இருந்துள்ளார்.

குறித்த இளைஞனின் வீடு அருகில் உள்ளதால், தனது வீட்டிற்கு உணவுக்காக சென்று வரும் நிலையில், நேற்று உணவருந்த இளைஞன் வராததால், வீட்டார் இளைஞனை தேடி சென்றபோது, பூட்டிய வீட்டினுள் படுக்கையில் இளைஞன் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version