யாழ். ஊர்காவற்றுறையில் நண்பனுடன் கடலுக்குச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை, புளியந்தோப்பைச் சேர்ந்த (வயது 27) உடையவரே ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊர்காவற்றுறை 9ஆம் வட்டாரத்திலிருந்து நேற்றுமுன்தினம் நண்பருடன் ஜக்சன் ஆழ்கடலுக்குச் சென்றுள்ளார்.
ஜக்சனுக்கு மீன்பிடித் தொழிலில் அனுபவமில்லை. இந்தநிலையில், கடலினுள் நீரோட்டப் பாதையில் செல்லும்போது ஜக்சன் படகிலிருந்து இறங்கியுள்ளார்.
அந்தப் பகுதியில் சுழியோட்டம் அதிகமாக இருந்தமையால் அவர் இழுத்துச் செல்லப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.ஜக்சனுடன் சென்ற நண்பர் அவரைத் தேடிக் காணாத நிலையில் ஊருக்குத் திரும்பும் விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.இந்த நிலையில் ஜக்சனின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
#srilankaNews

