ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

24 66c086bc50618

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வாக்காளர் ஒருவர் செலவிடக்கூடிய வரம்பையும் மீறி அதிக தொகையை செலவிட்டதாக தெரியவருமாயின், அவர் ஜனாதிபதியானாலும் அவரின் பதவியை இரத்து செய்ய சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கம்போதே இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசார செலவுகள் தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தேர்தல் ஆணையாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார செலவுகளை கண்காணிக்கும் வகையில் இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

“வோட் மணி மீற்றர்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த இணையத்தளத்தின் வெளியீட்டு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த இணையத்தளம் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா இன்ஸ்டிட்யூட் மற்றும் பாஃப்ரல் அமைப்பு உட்பட ஆறு முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளால் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version