2 30
இலங்கைசெய்திகள்

வெளிநாடொன்றில் நிர்கதியான ஈழத்து பெண்: ஊடகங்களால் நிகழ்ந்த அதிசயம்

Share

வெளிநாடொன்றில் நிர்கதியான ஈழத்து பெண்: ஊடகங்களால் நிகழ்ந்த அதிசயம்

2022 ஆம் ஆண்டு பணி பெண்ணாக ஓமான் நாட்டிற்குச் சென்ற எதுவித தொடர்பும் இல்லாமல் இருந்த தமிழ் பெண்ணொருவர் மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டம் முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த இராசலிங்கம் யசோமலர் என்பவர் கடந்த ஒரு வருடங்களாக எது வித தொடர்புகளும் இல்லாமல் இருப்பதாகவும் அவரை உரிய முறையில் மீட்டுத் தருமாறு அவரது குடும்பத்தினர் கடந்த 19.12.2024 அன்று ஊடகங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், ஓமான் சென்ற குறித்த பெண் கடந்த 11.01.2025 அன்று திடீரென் தங்களது வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளதாகவும், ஊடகங்கள் வாயிலாக அறிவித்து ஒரு மாதத்திற்குள்ளேயே எமது அக்காவை மீட்டுத் தருவதற்கு பேருதவியாக இருந்து செயற்பட்ட ஊடகங்களுக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குறித்த பெண்ணின் சகோதரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடொன்றில் நிர்கதியான ஈழத்து பெண்: ஊடகங்களால் நிகழ்ந்த அதிசயம் | A Tamil Woman Stranded Abroad

இவ்விடையம் குறித்து உரிய குடும்பத்தினர் நேற்று (16) அவரது வீட்டில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட பெண் மேலும் தெரிவிக்கையில், “தான் வெளிநாடு சென்று 2 வருடங்கள் ஆகின்றன. அதில் ஒருவருட காலத்திற்கான வேதனத்தை நான் தொழில் புரிந்த வீட்டின் உரிமையாளர் எமது குடும்பத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.

மற்றைய வருடத்திற்குரிய வேதனம் எதனையும் அவர்கள் எமது வீட்டிற்கு அனுப்பவில்லை, என்னை அடித்து துன்புறுத்தினார்கள் மொட்டை மாயில் வெயிலில் முழங்காலில் நிற்குமாறு பணித்தார்கள், கரண்டியை சூடாக்கி காலில் வைத்தார்கள் இவ்வாறு பல கொடுமகளை நான் அங்கு அனுபவித்தேன்.

எனவே, நான் கடமை புரிந்த மிகுதியாகவுள்ள ஒரு வருடத்திற்குரிய வேதனத்தை எனக்கு பெற்றுத்தர வேண்டும். என்னை மீட்டெடுப்பதற்கு உதவிய ஊடகங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...