அதிகரித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

rtjy 175

அதிகரித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 74, 664 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,200,119 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் இந்தியாவில் இருந்து வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13, 491 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version