20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பன்றிகள் மத்தியில் வேகமாக பரவும் நோய்த்தொற்று

Share

இலங்கையில் பன்றிகள் மத்தியில் வேகமாக பரவும் நோய்த்தொற்று

இலங்கையில் பன்றிகள் மத்தியில் பரவி வரும் PRRS(Porcine Reproductive and Respiratory Syndrome) எனப்படும் தொற்றுநோயின் தாக்கமானது, கட்டுப்பாட்டை மீறி நாடளாவிய ரீதியில் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவலறிந்த ஆதாரங்களின்படி, இதுவரை 2000 பன்றிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அநுராதபுரம் மத்திய நுவரகம் மாகாண பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட உளுக்குளம் பகுதியில் கண்டறியப்பட்ட குறித்த வைரஸ் தாக்கம் தற்போது அநேகமான பகுதிகளுக்கு பறவியுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த அடையாளம் தெரியாத வைரஸ் தொற்றுக்குள்ளாகி இரண்டு நாட்களில் பன்றிகளை கொன்றுவிடும் என்றும் கூறப்படுகிறது.

நிலைமை குறித்து கருத்து தெரிவித்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் தாரக பிரசாத்,

“இந்த நோய் பல பகுதிகளில் பரவி வருகிறது. ஆரம்பத்தில் காட்டுப்பன்றிகளை தாக்கிய இந்நோய் தற்போது பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கும் பரவியுள்ளது.

எனவே, நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

நோய்வாய்ப்பட்ட பன்றிகளின் இறைச்சியை உட்கொள்வதால் இந்த நோய் மனிதர்களை பாதிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

எவ்வாறாயினும், இந்த பிரச்சினை பண்ணைகளில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

இதேவேளை, அநுராதபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான பன்றிகள் சுமார் இரண்டு நாட்களில் உயிரிழந்துள்ளதாகவும் அது வேகமாக பரவி வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

இந்த பிரிவில் உள்ள சுமார் 20 பண்ணைகளில் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு பண்ணையில் மாத்திரம் 200 க்கும் மேற்பட்ட பன்றிகளை இறந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது” என்றார்.

இந்நிலையில் குறித்த தொற்றுக்கான தீர்வுகளை வழங்க கால்நடை வைத்தியர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பண்ணை விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பன்றிகள் அதிக அளவில் உயிரிழப்பதால், சில பண்ணைகளில் பாரிய இழப்பீடு ஏற்ப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 67a81aa32df3b
செய்திகள்இலங்கை

பாடப்புத்தக அச்சிடும் பணி நிறுத்தப்படவில்லை – கல்வி அமைச்சு விளக்கம்!

பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில...

20250908031349
செய்திகள்இலங்கை

“ஹரக் கட்டா”வின் பாதுகாப்பு செலவு மாதத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தரணி முறையீடு!

பாதாள உலகத் தலைவரான நதுன் சிந்தக, ‘ஹரக் கட்டா’ என்றும் அழைக்கப்படுபவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்...

25 68f75f57333cd
செய்திகள்இலங்கை

ருஹுணு விவசாய பீட மோதல்: 21 மாணவர்கள் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 21) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ருஹுணு பல்கலைக்கழக விவசாய...

vegetable
செய்திகள்இலங்கை

கனமழை காரணமாக காய்கறி விலைகள் அதிகரிக்கும் அபாயம்: மனிங் சந்தை வர்த்தகர்கள் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாகக் காய்கறி விலைகள் அதிகரிக்கும் என்று மனிங் சந்தை...