யாழில் சிறுமிகளிடம் பாலியல் சேஷ்டை விட்ட இளைஞர் கைது
இலங்கைசெய்திகள்

யாழில் சிறுமிகளிடம் பாலியல் சேஷ்டை விட்ட இளைஞர் கைது

Share

யாழில் சிறுமிகளிடம் பாலியல் சேஷ்டை விட்ட இளைஞர் கைது

யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு மற்றும் வன்புனர்விற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேகநபர் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அண்மையில் யாழ். வைத்தியசாலையில் அதிகளவு மாத்திரைகளை உற்கொண்டு தற்கொலைக்கு முயன்ற அல்லைப்பிட்டியினை சேர்ந்த 11 வயது சிறுமி காப்பாற்றப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட உளவள சிகிச்சையின் பொழுது அல்லைப்பிட்டி வெண்புறவி நகர்பகுதியினை சேர்ந்த 25 வயதான இளைஞர் தொடர்பில் சிறுமி தகவல் வெளியிட்டார்.

தான் உட்பட்ட ஐந்து சிறுமிகளுக்கு தொலைபேசி மூலம் தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய நிலையில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியதன் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் வைத்தியசாலை மூலம் ஊர்காவற்றை பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்ட நிலையில் ஊர்காவற்றை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர் .

இதனையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சிறுமியினை சட்ட வைத்திய அதிகாரி முன் பொலிஸார் முற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சிறுமி வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக பாலியல் தொந்தரவை மேற்கொண்ட 25 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மற்றுமொரு சிறுமியும் குறித்த சந்தேகநபரால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...