24 669aea772e3cc
இலங்கைசெய்திகள்

நாட்டில் தயாராகும் புதிய விமான நிலையம்

Share

நாட்டில் தயாராகும் புதிய விமான நிலையம்

துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் (Nimal Siripala De Silva) முயற்சியின் கீழ் ஹிங்குராங்கொட உள்நாட்டு விமான நிலையத்தை சர்வதேச விமான நடவடிக்கைகளுக்காக நவீனமயமாக்கும் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முன்பு ‘RAF’ மின்னேரியா என்று அழைக்கப்பட்ட இந்த விமான நிலையம் இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டி ரோயல் விமானப்படைக்காக நிர்மாணிக்கப்பட்டது.

இந்தநிலையில், இலங்கையின் பொருளாதார மேம்பாட்டை வலுப்படுத்தும் வகையில் நாட்டின் மத்தியில் அமைந்துள்ள விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2024 பாதீட்டின் கீழ் ஆரம்ப கட்டுமானம் மற்றும் மேம்பாட்டிற்காக 2 பில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

முதல் கட்டத்தில், தற்போதைய 2,287 மீட்டர் நீளமும், 46 மீட்டர் அகலமும் கொண்ட ஓடுபாதை 2,500 மீட்டராக நீடிக்கப்படும்.

அத்துடன், ஏர்பஸ் ஏ320 மற்றும் போயிங் 737 ரக விமானங்களுக்கு இடமளிக்கும் வகையில் கட்டுமானப் பணிகளை ஆறு மாதங்களில் முடிவுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
16 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: ஒரே நாளில் 968 சந்தேகநபர்கள் கைது!

இலங்கை முழுவதும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கும், சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர நடவடிக்கைகளின்...

15 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு மீண்டும் வரும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள்: 6 ஆவது கடன் தவணைக்கான மீளாய்வு ஆரம்பம்!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று, இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF)...

14 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மரந்தகஹமுல களஞ்சியசாலையைத் திறந்த அரசு: அரிசி விலை உயர்வுக்குத் தீர்வு!

இலங்கையின் அரிசி விலை நிர்ணயத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் மரந்தகஹமுல (Marandagahamula) களஞ்சியத் தொகுதியை, 13...

13 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ருவன்வெல்லையில் வாகன ஸ்டிக்கர் ஒட்டும் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: பெரும் சேதம்!

ருவன்வெல்ல, கரவனல்ல நகரில் அமைந்துள்ள வாகன ஸ்டிக்கர் ஒட்டும் கடை ஒன்றில் இன்று (14) காலை...