24 669aef3a37dd6
இலங்கைசெய்திகள்

யாழில் பரீட்சைக்கு செல்ல மறுத்த மகளினால் தவறான முடிவெடுத்த தாய்

Share

யாழில் பரீட்சைக்கு செல்ல மறுத்த மகளினால் தவறான முடிவெடுத்த தாய்

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் நடன பாட செய்முறைப் பரீட்சை கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற நிலையில் தனது மகள் செல்ல மறுத்ததால் தாயொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இதன்போது யாழ். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த அன்ரன்ஜெயபாலா உதயசந்திரிக்கா (வயது 48) என்ற 5 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மகள் நடன பாட செய்முறை பரீட்சைக்கு செல்லா விட்டால் தான் மண்ணெண்ணெய் ஊற்றி எரிவேன் என தெரிவித்து தாய் தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றியுள்ளார்.

அதன்பின்னர் தீக்குச்சியை பற்றவைத்த நிலையில் மகளிடம் பேசிக்கொண்டு இருந்த வேளை திடீரென அவரது ஆடையில் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் அவர் மீது பரவிய தீ அணைக்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று(19) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதோடு, உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
15 14
செய்திகள்உலகம்

போலி ஆளில்லா வானூர்திகள் மூலம் பிராந்தியத்தில் பதற்றத்தை உருவாக்கும் முயற்சி: ஈரான் குற்றச்சாட்டு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் ‘ஷாஹெட்’ (Shahed)...

14 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேசிய எரிபொருள் QR முறை: தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையில் இன்று (மார்ச் 15) காலை 6:00 மணி முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR)...

13 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, களுத்துறை மற்றும் காலி...

12 14
செய்திகள்உலகம்

ஈரானுடனான சமாதான உடன்படிக்கையை நிராகரித்தார் டொனால்ட் ட்ரம்ப்

ஈரானுடனான தற்போதைய போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு சமாதான உடன்படிக்கைக்கும் (Deal) அமெரிக்கா தயாராக...