24 66b888e4aae48
இலங்கை

மொட்டுவுடன் மீண்டும் இணைய வெளியேறியவர்கள் விதித்த நிபந்தனை

Share

மொட்டுவுடன் மீண்டும் இணைய வெளியேறியவர்கள் விதித்த நிபந்தனை

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச வேட்பு மனுத்தாக்கல் செய்யாமல் தவறைத் திருத்திக் கொண்டால் மீண்டும் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைவோம். தன்னிச்சையாக எடுத்த தீர்மானத்தால் கட்சி பிளவடைந்துள்ளது என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

அநுராதபுரம் பகுதியில் நேற்று (10) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை வேட்பாளராகக் களமிறக்கக் கட்சி ஏகமனதாகத் தீர்மானித்ததாகக் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.

கடந்த மாதம் 29 ஆம் திகதி பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற நிறைவேற்று சபை கூட்டத்தில் ஆளும் தரப்பின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர். கட்சியின் ஆதரவாளர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளே பெரும்பான்மையாகக் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாகவே எமக்கு ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த வாக்குறுதிக்குப் பின்னரே நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டோம். இருப்பினும் ஒரு தரப்பினரது தன்னிச்சையான செயற்பாடுகளினால் தவறான தீர்மானம் எடுக்கப்பட்டது.

கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் தீர்மானத்துக்கு எதிராகக் கட்சி செயற்படும் போது ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். கட்சி எடுத்த தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று மகிந்த ராஜபக்சவிடம் பலமுறை வலியுறுத்தினோம்.

தம்மிக்க பெரேரா இறுதி நேரத்தில் போட்டியிட முடியாது என்று குறிப்பிட்டார். ஆகவே நாமல் ராஜபக்சவை வேட்பாளராகக் களமிறக்கத் தீர்மானித்தோம் என்று பொதுஜன பெரமுன குறிப்பிடுவது நகைப்புக்குரியது.

நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் போது இவற்றை நாங்கள் எடுத்துரைத்தோம். ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச வேட்பு மனுத்தாக்கல் செய்யாமல் தவறை திருத்திக் கொண்டால் பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் இணைவோம் என்றார்.

Share
தொடர்புடையது
24 2
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய கிழக்கு மோதலில் நடுநிலைமை அவசியம்: துறைமுகங்களை அனுமதிப்பது ஆபத்தானது – மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தற்போது தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

15 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: படகு கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு, இருவரைத் தேடும் பணி தீவிரம்!

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறையில் இன்று (06) காலை இடம்பெற்ற படகு விபத்தில், நீரில் மூழ்கி இருவர்...

16 5
செய்திகள்அரசியல்இலங்கை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீதான சதொச ஊழல் வழக்கு: மார்ச் 18-க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவர் மீதான சதொச (Sathosa) ஊழல் வழக்கு, கொழும்பு...