வெளிவந்தது ரசிகர்கள் மனம் கவர்ந்த 96 படத்தின் 2 பார்ட் அப்டேட்.. என்ன தெரியுமா

IMG 20241128 WA0026

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இவருடைய திரை வாழ்க்கையிலும் முக்கியமான திரைப்படம் ’96. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பிரேம் குமார்.

இப்படம் 2018 – ம் ஆண்டு வெளிவந்து இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. இப்படத்தில் வந்த ரீயூனியன் காட்சி, பள்ளி பருவ காட்சி, த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதிக்கு இடையிலான பேச்சுவார்த்தை என பல்வேறு விஷயங்கள் ரசிக்க வைத்தது.

இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், தமிழில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்ற மொழிகளில் கிடைக்கவில்லை.

96 படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரேம் இயக்கிய திரைப்படம் மெய்யழகன். இப்படம் சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரேம் குமார் இயக்க போகும் அடுத்த படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, அடுத்து பிரேம் 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளாராம்.

இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மீண்டும், விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இப்படத்தில் நடிக்க உள்ளாராம்.

மேலும், இப்படத்திற்கு கோவிந்த் வஸந்தா இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

Exit mobile version