வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்ட எட்டு பேருக்கு நீதிமன்றம் உத்தரவு

tamilni 399

வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்ட எட்டு பேருக்கு நீதிமன்றம் உத்தரவு

வவுனியா வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட எட்டுபேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 08.03.2024 ஆம்திகதி வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளின்போது குறித்த எட்டுபேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்டதையடுத்து குறித்த வழக்கினை நடத்த பொலிஸார் கால அவகாசம் கோரியிருந்தனர்.

மேலும் சட்டமா திணைக்களத்திடமிருந்து சில தகவல்களை பெற இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் பொலிஸாரினால் எந்தவொரு ஆக்கப்பூர்வமான ஆவணங்களும் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க முடியாததையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து எட்டுபேரையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது

இதேவேளை எட்டுபேரும் விடுதலைசெய்யப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Exit mobile version