பிரதமரின் யோசனையின் பேரில் நியமிக்கப்படவுள்ள விசேட குழு
இலங்கையின் 77 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வைக்கு சிறப்பு வழிநடத்தல் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழு நியமனம் தொடர்பில் அமைச்சரவையில் பிரதமர் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதன்படி, பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த குழுவில் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் உள்ளடக்கப்படவுள்ளனர்.
இலங்கையின் சுதந்திர தினம் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடப்படும்.
இவ்வருடம் புதிய அரசாங்கம் மற்றும் புதிய ஜனாதிபதி தலைமையில் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளமையால் அதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.