70 வயதுடைய ஆண் ஒருவர் 40 வயதுடைய பெண்ணுக்கு தொடர்ச்சியாக பாலியல் சேட்டைகள் செய்து வந்துள்ளார்.
குறித்த நபர் கிளிநொச்சி அரச நிறுவனத்தில் பணி புரிந்து வரும் பெண்ணுக்கு வாய் மற்றும் கை சைகைகளை பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டு வந்துள்ளார்.
குறித்த நபரின் சேட்டைகள் கட்டுக்கடங்காமல் போகவே பெண் பொலிஸாரிடம் முறைபாடு செய்துள்ளார். குறித்த நபரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார்.
குறித்த நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#SriLankaNews