ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த அதிகாரிகள் விமான நிலையத்தில் உள்ள தீர்வையற்ற அங்காடிகளிலிருந்து 30க்கும் மேற்பட்ட மதுபான போத்தல்களைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொள்வனவு செய்தமைக்காக தற்போது ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக விசேட விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.