முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று(4) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு, கடற்றொழிலாளர்களின் 7 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, முல்லைத்தீவு கடலில் சட்டவிரோதமான முறையில் ஒளிப்பாச்சி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 6 கடற்றொழிலாளர்கள் படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை தடுத்து கைது செய்த நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு படகு உரிமையாளர்களான முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களையும் பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.
இதனை விட கொக்குளாய் கடற்பரப்பில் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களமும் மீனவ சங்கமும் இணைந்து நடத்திய சோதனையின் போது ஒரு படகுடன் இருவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் ஈடுபட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை நிறுத்த கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை முன்வைத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.