23 2
இலங்கைசெய்திகள்

சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்

Share

சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்

சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 637 வாகனங்கள் பல வருடங்களாக கொழும்பு மற்றும் ருஹுனுபுர துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளதால் பழுதடைந்து வருவதாக தெரியவந்துள்ளது.

இவற்றில் 188 வாகனங்கள் ஐந்து வருடங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவற்றில் 435 வாகனங்கள் தனியார் நிறுவனத்திடம் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட மட்டக்குளி காணியிலும், ஏனைய 202 வாகனங்கள் ருஹுணுபுர துறைமுகத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த காணிக்கு ஆண்டுக்கு நான்கு கோடியே பதினெட்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வாடகை வாங்குவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வாகனங்கள் ஓட்டிச்செல்வதற்கு தகுதியற்றதாக மாறியுள்ளதாகவும், வாகனங்களை ஏலம் விடுவதன் மூலம் நியாயமான தொகையை ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது.

இவற்றில் பெரும்பாலான வாகனங்களுக்கான சோதனைகள் இன்னும் நிறைவடையவில்லை என சுங்கத் திணைக்களம் கணக்காய்வு அலுவலகத்திற்கு அறிவித்துள்ளதுடன், வாகனங்கள் குறித்து உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்குமாறு பரிந்துரை செய்துள்ளது.

Share
தொடர்புடையது
13 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு மாநகர எல்லைக்குள் வாகன தரிப்பிடக் கட்டணங்கள் அறவிடுவது இடைநிறுத்தம்!

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனங்களைத் தரித்து வைப்பதற்காக அறவிடப்பட்டு வந்த கட்டணங்களை, மறு...

12 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்க அடிப்படையில் எரிபொருள்: நாளை முதல் புதிய நடைமுறை அமல்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்...

10 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரிய அனுமதியின்றி ட்ரோன்களை இயக்கத் தடை: இலங்கை விமானப்படை விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கைக்குள் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) இயக்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை...

09 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த புதிய எரிபொருள் திட்டம்: ஜனாதிபதி தலைமையில் விசேட தீர்மானம்

இலங்கையில் நிலவும் தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் மீன்பிடித் தொழிலைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதை...