இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : இலங்கைக்கு கிடைக்கவுள்ள உர மானியம்

Share

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : இலங்கைக்கு கிடைக்கவுள்ள உர மானியம்

உலக உணவுத் திட்டத்தின் (World Food Programme) கீழ் இலங்கை அரசாங்கத்திற்கு மானியமாக 55,000 மெற்றிக் தொன் மியூரேட் ஒப் பொட்டாஷ் உரத்தை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விடயத்துடன் தொடர்புடைய இருதரப்பு உடன்படிக்கை உலக உணவுத் திட்டம், உரல்கெம் – உரல்கலி குழு மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஸ்டேட் பேர்டிலைசர் கம்பெனி ஆகியவற்றால் செப்டம்பர் 20 அன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

குறித்த உரக் களஞ்சியத்தை ஏற்றிச் செல்லும் கப்பல் இன்று (10.12.2024) நாட்டிற்கு வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் உரக் களஞ்சியத்தை இலங்கை அரசிடம் கையளிக்கும் உத்தியோகபூர்வ வைபவம் எதிர்வரும் 12ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட தகவல்களைக் கருத்தில் கொண்டு இந்த உரமானியம் வழங்கப்படவுள்ளது.

அதன்படி, மொத்த உரத்தில் 50% விவசாயிகளுக்கு நெல் மற்றும் பிற பயிர்களுக்குப் பயன்படுத்தவும், மீதமுள்ள 50% தென்னைச் செய்கைக்காகவும் விநியோகிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 84
செய்திகள்உலகம்

இஸ்லாமாபாத்தில் சரித்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தை: ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரானியக் குழுவினரைச் சந்தித்தார் ஷெபாஸ் ஷெரீப்!

மத்திய கிழக்கில் கடந்த பெப்ரவரி 28 முதல் நீடித்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...