யாழில் திடீர் சுற்றிவளைப்பில் 531 பேர் கைது

tamilni 476

கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் யாழில் 531 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த சந்தேகநபர்களுக்கு நீதிமன்றங்களினால் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 301 நபர்களும்,சாதாரண பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 230 நபர்களுமே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version