சமீபத்திய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, நாடு முழுவதும் 504 மருத்துவக் குழுக்கள் தற்போது செயற்பாட்டில் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 1041 பாதுகாப்பு நிலையங்களை (Safety Camps) அண்மித்து இந்த மருத்துவக் குழுவினர் தமது கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி மருத்துவ உதவி, தொற்றுநோய் தடுப்பு மற்றும் பொது சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்நிலையில், வெள்ளத்தில் மூழ்கியுள்ள சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு (Chilaw General Hospital) அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகள் இன்று (டிசம்பர் 5) விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

