வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன்

tamilni 357

வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன்

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுக்கு பாதீட்டில் 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று(19.12.2023) இடம்பெற்ற சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேசிய கடற்றொழில் தினத்தினை இன்று கடற்றொழில் அமைச்சினால் யாழ்.மாவட்டத்தில் கொண்டாடியுள்ளனர்.

கடற்றொழில் பிரச்சினைகளுக்கு ஓரிரு வருடங்களிற்குள் தீர்வு காணமுடியும் என நான் நம்புகின்றேன்.
பாதீட்டில் வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு என ரூபாய் 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்காக நான் இந்த நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வடமாகாண கடற்றொழிலாளர் சார்பில் நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version