வடக்கில் வீடற்ற மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

24 660515a831600

வடக்கில் வீடற்ற மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

வடக்கு மாகாணத்தில் வீடற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (28.03.2024) நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

குறித்த வீடுகள் சூரிய கலன்களின் மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இதனடிப்படையில் பயனாளர்களுக்கு சுமார் 45 இலட்சம் பெறுமதியான 750 சதுர அடி விஸ்தீரணமுள்ள கல் வீடுகள் பயனாளர்களுக்கு கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version