18 10
இலங்கைசெய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக காத்துக் கிடக்கும் 5000 இதயநோயாளிகள்

Share

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக காத்துக் கிடக்கும் 5000 இதயநோயாளிகள்

கொழும்பு(colombo) தேசிய வைத்தியசாலையில் ஐயாயிரம் இதய நோயாளிகள் சத்திரசிகிச்சைக்காக காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதன்படி நானூறு (400) நோயாளிகள் ஒரு வருடம் மற்றும் பதினொரு மாதங்களுக்குள் இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் பட்டியலில் உள்ளனர். மேலும், இரண்டு முதல் மூன்று வருட காலத்திற்கு எழுநூற்று ஐம்பத்தாறு (756) நோயாளிகளும், மூன்று வருட காலத்திற்கு அறுநூறு (600) நோயாளிகளும், இரண்டாயிரத்து நானூறு (2400) நோயாளிகள் நான்கு வருட காலம் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

இந்த நோயாளர்கள் முறையான முறையில் சத்திரசிகிச்சையை மேற்கொள்ளும் போது சில நோயாளிகள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்கள் ஒன்றியத்தின் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட விசேட சத்திரசிகிச்சை காத்திருப்புப் பட்டியலில் உள்ள நோயாளிகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவில் தனியார் துறையினரால் சத்திரசிகிச்சையை மேற்கொள்ளுமாறு அடிக்கடி நிர்ப்பந்திக்கப்படும் நோயாளிகளுக்கு திறைசேரி உதவி வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

இல்லையேல் விசேட நோய்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மருத்துவ காப்புறுதி முறையை மக்களுக்கு அறிமுகப்படுத்துவது அவசியமாகலாம் என நிபுணர் டொக்டர் சமல் சஞ்சீவ மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...