500 மில்லிலீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றை 19 ரூபா செலவில் அனைத்து ச.தொ.ச விற்பனை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
தற்போது 500 மில்லிலீற்றர் தண்ணீர் போத்தல் 35 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், தண்ணீரைப் பயன்படுத்திய பின்னர் வெற்றுப் போத்தல் வீசப்படுகிறது.
இதனால் சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது. எனவே, சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத, மீள் சுழற்ச்சி செய்யக் கூடிய புதிய போத்தல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதன் அறிமுக விலையாக 6 ரூபா கழிவு வழங்கப்படுகிறது. 29 ரூபாவிற்குப் பெற்றுக்கொள்ளும் தண்ணீர் போத்தல்களைப் பயன்படுத்திவிட்டு, போத்தல்களை சதொசவிடம் மீள ஒப்படைக்கப்படும் பட்சத்தில் 10 ரூபா பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே 19 ரூபாவிற்கு 500 மில்லிலீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றை ச.தொ.ச. விற்பனை நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை விரைவில் முழு அளவில் செயற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
#SrilankaNews
Leave a comment