எலிக்காய்ச்சலால் குடும்பஸ்தர் உயிரிழப்பு – இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலி!

25 68fa79946f647

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) காரணமாக 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இன்று (19) காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியைச் சேர்ந்த அன்னலிங்கம் அஜந்தன் (வயது 42) என்பவராவார்.

இவருக்கு கடந்த 17-ஆம் திகதி திடீரெனக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. எனினும், இன்று (19) அதிகாலை நிலைமை மோசமடைந்து அவர் இரத்த வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவர் எலிக்காய்ச்சலால் (Rat Fever) பாதிக்கப்பட்டிருந்ததாகச் சிகிச்சை அளித்த வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் வரட்சியான காலப்பகுதிகளில் தேங்கி நிற்கும் நீர்நிலைகள் ஊடாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. காய்ச்சல், தசைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

 

Exit mobile version