4 7
இலங்கைசெய்திகள்

சுற்றுலா பயணிகளால் இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் டொலர்கள்

Share

இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளால் 400.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்ட தரவுகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் கிடைத்த பதிவுசெய்யப்பட்ட 341.8 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில் இது 17.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அத்துடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 362.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலா வருமானமாக கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளால் 3,168.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மொத்த வருமானமாக கிடைத்துள்ளது என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது 2023 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 2,068.0 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்துடன் ஒப்பிடும் போது 53.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை மொத்தமாக 232,341 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.

மேலும், இவ்வருடத்தில் பெப்ரவரி 27ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தமாக 485,102 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...