24 669b40c2391c4
இலங்கைசெய்திகள்

எயிட்ஸ் நோய் குறித்து அதிர்ச்சித் தகவல்

Share

எயிட்ஸ் நோய் குறித்து அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் (Sri Lanka) கடந்த ஆண்டு, எச்.ஐ.வி எயிட்ஸ் (HIV Aids) நோயால் பாதிக்கப்பட்டுள்ள 40 குழந்தைகள் இனங்காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் (National STD/AIDS Control Programme) தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த நோயால் பாதிக்கப்பட்ட வயோதிபர்களின் எண்ணிக்கை 3,169 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய பாலியல் நோய் விசேட வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்தார்.

அத்துடன் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2022இல் 607 ஆகவும், 2023இல் 694 ஆகவும் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது 14 சதவீதம் அதிகமாகும் எனவும், இந்த 694 நோயாளிகளில் 613 பேர் ஆண்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரிடையே எயிட்ஸ் பரவுவது அதிகரித்து வருவதாக விசேட வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...