யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நாரந்தனை வடக்குப் பகுதியில், நான்கு வயது சிறுவன் ஒருவன், நேற்றுக்காலை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
விஜயேந்திரன் ஆரணன் என்ற 4 வயது சிறுவனே, இவ்வாறு கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
வீட்டிலிருந்து தந்தை வேலை செய்து கொண்டிருந்த தோட்டத்துக்கு நடந்து சென்ற சிறுவன் கிணற்றடியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, தவறுதலாக கிணற்றில் விழுந்துள்ளார்.
இதனையடுத்து சிறுவனை காணாத பெற்றோர், சிறுவனை தேடிய நிலையில் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SrilankaNews