வடமாகாண கராத்தே போட்டியில் வவுனியாவிற்கு 4 பதக்கங்கள்
வடமாகாண ரீதியில் நடைபெற்ற பாடசாலை மட்டங்களுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டியில் வவுனியாவிற்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
வடமாகாண ரீதியில் 2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மட்ட கராத்தே சுற்றுப் போட்டி, 11, 12 ஆம் திகதிகளில் நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெற்றுள்ளது.
இப்போட்டியில் நிப்பான் கராத்தே சங்கத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் 4 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய பாடசாலைக்கும், கழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு ஆசிரியர்களான ஜே.டி.ரெஜினோட்டும், ஞா.ஞானகீதனும் பயிற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment