37 கோடி ரூபா மதிப்புள்ள மாணிக்கக்கற்கள் கைப்பற்றல்

tamilni 176

37 கோடி ரூபா மதிப்புள்ள மாணிக்கக்கற்கள் கைப்பற்றல்

கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 37 கோடி ரூபா மதிப்புள்ள மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கமைய, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படவிருந்த 2 நீல மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் மதிப்பு 37 கோடி ரூபா என இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வெலிவேரி பிரதேசத்தின் தேரர் ஒருவர் உட்பட இருவர் கொஸ்லந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version