25 17
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல் 2024: கட்டுப்பணத்தை இழந்த 35 வேட்பாளர்கள்

Share

ஜனாதிபதி தேர்தல் 2024: கட்டுப்பணத்தை இழந்த 35 வேட்பாளர்கள்

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களைத் தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் தங்களது கட்டுப்பணத்தை இழந்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாகத் தெரிவான அநுரகுமார திஸாநாயக்க, இரண்டாம் இடத்தை பெற்ற சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு மாத்திரமே கட்டுப்பணத்தை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை தேர்தலில் வரலாற்றில் அதிகளவான வேட்பாளர்கள் 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.

இதற்கமைய 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்திய நிலையில், அவர்களில் 39 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். ஜனாதிபதி வேட்பாளரான அஹிதுருஸ் மொஹமட் இல்யாஸின் திடீர் மரணம் காரணமாக இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் 38பேர் மாத்திரமே போட்டியிட்டனர்.

இதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஊடாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு 50,000 ரூபாவும், சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு 75,000 ரூபாவும் கட்டுப்பணமாக அறவிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தேர்தலில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஸ, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விஜயதாஸ ராஜபக்ஸ, திலித் சுசந்த ஜயவீர, சரத் மனமேந்திர, பிரியந்த புஸ்பகுமார விக்ரமசிங்க, கே.கே.பியதாஸ, சிறிபால அமரசிங்க, சரத் கீர்த்திரத்ன, லலித் டி சில்வா ஆகியோர் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர்.

அத்துடன், தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், மயில்வாகனம் திலகராஜ், அபுபக்கர் மொஹமட் இன்பாஸ், ஏ.எஸ்.பி.லியனகே, பானி விஜேசிறிவர்தன, அஜந்த டி சொய்சா, பத்தரமுல்லே சீலரத்ன தேரர், நுவன் சஞ்சீவ போபகே, கே.ஆனந்த குலரத்ன ஆகியோரும் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், ஓஷல லக்மால் அனில் ஹேரத், ஜனக்க பிரியந்த குமார ரத்நாயக்க, அக்மீமன தயாரத்ன தேரர், கே.ஆர்.கிஷான், பொல்கம்பொல ராலலாகே சமிந்த அநுருத்த, அநுர சிட்னி ஜயரத்ன, சிறிதுங்க ஜயசூரிய ஆகியோரும் கட்டுப்பணத்தை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மகிந்த தேவகே, மொஹமட் இல்லியாஸ், லக்ஸ்மன் நாமல் ராஜபக்ஸ, அன்டனி விக்டர் பெரேரா, கீர்த்தி விக்ரமரத்ன, மரக்கலமானகே பிரேமசிறி, பி.டபிள்யூ.எஸ்.கே.பண்டாரநாயக்க, டி.எம்.பண்டாரநாயக்க, அகம்பொடி பிரசங்க சுரஞ்ஜீவ அனோஜ் டி சில்வா, அநுருத்த ரணசிங்க ஆராய்ச்சிகே ரொஷான் ஆகியோரும் 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணத்தை இழந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...