இலங்கைசெய்திகள்

இந்த வருடத்துக்குள் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 333 இந்தியர்கள் 333 Indians Entered Sri Lanka Illegally

21 13
Share

இந்த வருடத்துக்குள் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 333 இந்தியர்கள் 333 Indians Entered Sri Lanka Illegally

இலங்கை கடற்படையினர், 2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 45 இந்திய இழுவை படகுகளை கைப்பற்றியுள்ளதுடன், 333 இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து நேற்றும் 11 இந்தியர்களின் இழுவை படகு ஒன்று கைப்பற்றப்பட்டது.

இந்த இழுவை படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை வெளிநாட்டு மீன்பிடி இழுவை படகுகளின் சட்டவிரோத கடற்றொழில் நடைமுறைகளை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கடற்பரப்பில் வழக்கமான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருதாக இலங்கையின் கடற்படை தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த வருடத்தில் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையின்போது இலங்கையின் கடற்படை உறுப்பினர் ஒருவரும், இரண்டு இந்திய கடற்றொழிலாளர்களும் மரணமாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...