6 7
இலங்கைசெய்திகள்

ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட தகவல்

Share

ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஓய்வூதிய நிலுவை மற்றும் பணிக்கொடையாக சுமார் 30 பில்லியன் ரூபா இன்னும் செலுத்தப்படாமல் இருப்பதாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன (Chandana Abeyrathna) தெரிவித்துள்ளார்.

இதனால் சுமார் 600,000 ஓய்வூதியதாரர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 1992 முதல் சில ஓய்வூதிய நிலுவைத் தொகைகள் நிலுவையில் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நிலுவையில் உள்ள ஓய்வூதிய நிலுவை மற்றும் பணிக்கொடையை துரிதமாக வழங்குவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக பேராசிரியர் அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பாக நிதி அமைச்சுடன் (Ministry of Finance) கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2025 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பத்தாம் திகதி ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது.

அத்தோடு, ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஓய்வூதியம் ஒன்பதாம் திகதி வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, ஒகஸ்ட் மாதம் மாத்திரம் ஏழாம் திகதி ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...